இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆனது, கடந்த ஆறு ஆண்டுகளில் தேர்தலில் போட்டி இடாத 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPs) பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
இந்த நடவடிக்கையானது நடைபெற்று வரும் தேர்தல் முறை மாற்றத்தின் ஒரு பகுதியாகும் என்பதோடு இது கடந்த இரண்டு மாதங்களில் பட்டியலில் இருந்து நீக்கப் பட்ட மொத்தக் கட்சிகளின் எண்ணிக்கையை 808 ஆக உயர்த்தியுள்ளது.
முதல் கட்டத்தில், 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று 334 RUPP கட்சிகள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டன.
இந்த இரண்டாம் கட்டத்திற்குப் பிறகு, 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 29Aவது பிரிவின் கீழ் 2,046 RUPP கட்சிகளின் பதிவுகள் தேர்தல் ஆணையத்தில் தக்க வைக்கப் பட்டுள்ளன.
2021–22, 2022–23 மற்றும் 2023–24 ஆகிய ஆண்டுகளுக்கான வருடாந்திரத் தணிக்கை செய்யப் பட்ட கணக்குகளை சமர்ப்பிக்காததற்காகவும், தேர்தல் செலவு அறிக்கைகளை தாக்கல் செய்யத் தவறியதற்காகவும் மேலும் 359 RUPP கட்சிகளை ECI நீக்க உள்ளது.