அரசியல்/பொது வாழ்வில் நன்னடத்தைக்கான காயிதே மில்லத் விருது
February 10 , 2024 460 days 833 0
2023 ஆம் ஆண்டிற்கான அரசியல் / பொது வாழ்வில் நன்னடத்தைக்கான காயிதே மில்லத் விருதை மூத்தப் பத்திரிகையாளர் N. ராம் மற்றும் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் அபுசலேஹ் ஷெரீப் ஆகியோர் வென்றுள்ளனர்.
சச்சார் குழு அறிக்கையை தயாரிப்பதில் ஷெரீப் ஆற்றிய பங்கிற்காக வேண்டி இந்த விருதினை அவர் பெற்றுள்ளார்.
முன்னதாக, தி வயர் மற்றும் கி.வீரமணி ஆகியோருக்கு 2022 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டது.
இந்த விருது ஆனது, பிரபல தென்னிந்தியத் தலைவரான காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹேப்பின் நினைவாக 2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
சுதந்திர இந்தியா கட்டமைக்கப்பட்ட காலங்களில், மதராஸ் மாகாணத்தில் எதிர்க் கட்சித் தலைவராக அவர் பெரும் செல்வாக்கைச் செலுத்தினார்.
அவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் (1952-58) பணியாற்றி உள்ளார் என்பதோடு அவர் மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.