அரசு அதிகாரிகளை முன்கூட்டியே ஓய்வு பெறச் செய்வதற்கான முழுமையான உரிமை மத்திய அரசுக்கு உள்ளதாக மத்தியப் பிரதமர் அலுவலகத்திற்கான இணையமைச்சர் தெரிவித்தார்.
கீழ்க்காண்பனவற்றின் அடிப்படையில் அவர்களை ஓய்வு பெறக் கோரலாம்.
நேர்மையின்மை மற்றும் திறமையின்மை
பொது நலன்
அடிப்படை விதிகள் 56(i) (1), 1972 ஆம் ஆண்டின் மத்திய குடிமைப் பணிகளுக்கான விதிகளின் விதி எண் 48, மற்றும் 1958 ஆம் ஆண்டின் அனைத்திந்திய பணி விதிகள்
அதிகாரிகளை மதிப்பாய்வு செய்யும் அதிகாரமும் அரசுக்கு உண்டு. அதன்படி ஜூலை 2014 – மே 2019 காலகட்டங்களில் 36,765 குரூப் A அதிகாரிகள், 82654 குரூப் B அதிகாரிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளனர்.
125 குரூப் A மற்றும் 187 குரூப் B அதிகாரிகள் ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.