அரசு உறு சொத்துக் கோட்பாடு (Escheat) என்பது ஒருவர் உயில் இல்லாமல் மற்றும் சட்டப்பூர்வ வாரிசுகள் எதுவும் இல்லாமல் இறக்கும் போது அந்த சொத்தின் உரிமை அரசிடம் ஒப்படைக்கப்படும் ஒரு சட்டப்பூர்வ வழிமுறையாகும்.
இது எந்தவொரு சொத்தும் உரிமை இல்லாமல் இருப்பதை உறுதி செய்து, சட்ட ஒழுங்கைப் பராமரிக்கிறது மற்றும் அந்தச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவதையோ அல்லது கைவிடுவதையோ தடுக்கிறது.
"Escheat" என்ற சொல் ஆனது "to fall to" என்று பொருள்படும் "eschete" என்ற பழைய பிரெஞ்சு சொல்லிலிருந்து பெறப் பட்டது என்பதோடு நிலப்பிரபுத்துவ நில உடைமை அமைப்பில் அதன் தோற்றுருவினைக் கொண்டுள்ளது.
இந்தியாவில், அரசு உறு சொத்துக் கோட்பாடு இந்திய அரசியலமைப்பின் 296வது சரத்து மற்றும் 1956 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் 29வது பிரிவின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
சரத்து 296, வாரிசு அல்லது உரிமையாளரல்லாத சொத்து, அதற்கேற்றப் பொருந்தக் கூடிய விதிப் படி, மத்திய அல்லது மாநில அரசாங்கத்திடம் இருக்கும் என்று கூறுகிறது.
இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் 29வது பிரிவு, ஓர் இந்து நபர் உயிலில்லாமலும், சட்டப் பூர்வ வாரிசுகள் இல்லாமலும் இறந்தால், அந்த சொத்து அரசாங்கத்திற்குச் சொந்தம் ஆகிறது.
ஒரு செல்லுபடியாகும் உயில் அமல்படுத்தப்பட்டு, தகுதி வாய்ந்த நீதிமன்றத்தால் சான்று உறுதி வழங்கப்பட்டிருந்தால், அரசு உறு சொத்துரிமைக் கோட்பாட்டை செயல் படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெளிவுபடுத்தியது.
அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளும் இல்லாத போது மற்றும் எந்தவொரு சாசனமும் இல்லாதபோது, 29வது பிரிவின் கீழ் கடைசி முயற்சியாக மட்டுமே அரசு அதன் மீது உரிமை கோருகிறது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.
சொத்து சட்டப்பூர்வ உரிமையாளரிடம் விடப்படாமலோ அல்லது சட்டவிரோதமாக உடைமையாக்கப் படாமலோ இருப்பதை உறுதி செய்வதன் மூலம் பொது நலனைப் பாதுகாக்க இந்தக் கோட்பாடு உதவுகிறது.
உரிய சட்டச் செயல்முறைக்குப் பிறகு உரிமை கோரப்படாத அல்லது கைவிடப்பட்ட சொத்துக்களுக்கும், குறிப்பாக வங்கி மற்றும் நிதித் துறைகளில் தனித்தனி ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ், சொத்துரிமைக் கொள்கை பொருந்தும்.
இந்தியாவில், உரிமை கோரப்படாத நிதிச் சொத்துக்கள் இந்தியக் காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு சொத்துக்கும் ஒரு சட்டப்பூர்வ உரிமையாளர் இருப்பது மற்றும் புறக்கணிக்கப் படவோ அல்லது சுரண்டப்படவோ விடப்படாது என்பதை உறுதி செய்வதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை அரசு உறு சொத்துக் கோட்பாட்டுக் கொள்கை உறுதி செய்கிறது.