தமிழ்நாடு அரசானது, மாநில அரசு ஊழியர்களுக்கு பல்வேறு காப்பீட்டுத் தொகைகள் மற்றும் சலுகைகளை இலவசமாக வழங்குவதற்கு ஒப்புக் கொண்ட ஏழு வங்கிகளுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பாரத் ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் யூனியன் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
ஒப்பந்தத்தின் சில விதிகளாவன:
விபத்து காரணமாக மரணம் அல்லது நிரந்தர உறுப்புச் செயல்பாட்டுக் குறைபாடு ஏற்பட்டால் 1 கோடி ரூபாய் தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகை,
விபத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் மகள்களின் திருமணச் செலவுகளுக்கு 5 லட்சம் ரூபாய் உதவி,
விபத்தில் உயரிழந்த அரசு ஊழியரின் இரண்டு மகள்களின் உயர்கல்விக்காக, வங்கிகளால் 10 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும்,
பணியின் போது இயற்கை மரணம் ஏற்பட்டால் 10 லட்சம் ரூபாய் கால ஆயுள் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.