2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, தமிழ்நாட்டில் இறந்தவர்களின் உடல் உறுப்பு தானத்தில் 64% அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பாகும்.
இறந்தவர்களின் உடல் உறுப்பு தானம் 2022-ஆம் ஆண்டில் 156 ஆக இருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டில் 268 ஆக அதிகரித்தது, மேலும் 2025-ஆம் ஆண்டில் 266 ஆக உயர்ந்த அளவிலேயே காணப்பட்டது.
மொத்த உறுப்பு கொடையாளர்களில் அரசு மருத்துவமனைகளின் பங்கு 2022-ஆம் ஆண்டில் 33% ஆக இருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டில் 64% ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் 13 அரசு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனைகள், 159 தனியார் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனைகள் மற்றும் 35 மாற்று அறுவை சிகிச்சை இல்லாத உறுப்பு மீட்டெடுப்பு மையங்கள் (NTORCs) உள்ளன.
மாற்று அறுவை சிகிச்சை இல்லாத உறுப்பு மீட்டெடுப்பு மையங்கள் (NTORCs) ஆனது சுமார் 15% உறுப்பு தானத்திற்குப் பங்களித்து, கொடையாளர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த உதவியுள்ளன.
தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் (TRANSTAN) ஆனது மாநிலத்தில் உடல் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.