TNPSC Thervupettagam

அரசு மருத்துவமனைகளில் மிகக்குறைந்த மருத்துவச் செலவு – தமிழ்நாடு

May 11 , 2026 4 days 111 0
  • தேசிய மாதிரி கணக்கெடுப்பு (NSS) அறிக்கையின்படி, இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு மிகக்குறைந்த சொந்தச் செலவில் மேற்கொள்ளும் மருத்துவச் செலவை (OOPME) தமிழ்நாடு பதிவு செய்துள்ளது.
  • தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளி சிகிச்சைக்கு ஆகும் சராசரி செலவு ₹1,357 ஆகும்; இது தேசிய சராசரியான ₹6,631-ஐ விட மிகவும் குறைவு.
  • இந்த ஆய்வானது கடந்த 365 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட உள்நோயாளி சிகிச்சைகளுக்கான மருத்துவச் செலவுகளை உள்ளடக்கியது.
  • அதேசமயம், தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான செலவு தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.
  • தனியார் மருத்துவமனைகளில் சராசரி செலவு ₹74,168 ஆக உள்ளது, தேசிய சராசரி ₹50,508 ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்