அரசு ரயில்வே காவல் துறை இணையதளம் மற்றும் கைபேசி செயலி
October 11 , 2019 2125 days 746 0
உள்துறை விவகாரங்களுக்கான மத்திய இணையமைச்சரான நித்யானந்த் ராய் மத்திய அரசின் ரயில்வே காவல் துறையின் வலைதளமான “railways.delhipolice.gov.in” மற்றும் “சஹயாத்ரி” என்ற கைபேசி செயலியைத் தொடங்கியுள்ளார்.
இந்தியா முழுவதிலும் உள்ள ரயில்வே அதிகார வரம்பில் செயல்படும் குற்றவாளிகளின் புகைப்படங்கள் உட்பட குற்றவாளிகளின் தரவுகளை ரயில்வே காவல் துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
விரைவு பதிலெதிர்ப்புக் குறியீடுகளை (QR) சோதனை செய்து படிக்கவும் அவசர அழைப்பு செய்யவும் இது ஒரு வசதியைக் கொண்டிருக்கும்.
சஹயாத்ரி
கூகுள் வரைபடத்துடன் புவியைக் குறியிடுதல் செய்வதன் மூலம் ரயில்வே பயணிகளுக்கு ஒரு காவல் நிலையத்தின் அதிகார வரம்பையும் அரசு ரயில்வே காவல் துறை அதிகாரிகளின் விவரங்களையும் அறிய சஹயாத்ரி செயலி உதவும்.
குற்றவியல் தரவுத் தளத்தை நிகழ்நேரத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம் இந்தியா முழுவதிலும் இருந்து பயணிகளின் புகார்களைத் தீர்ப்பதற்கும் குற்றங்களைக் கண்டறிவதற்கும் இது ரயில்வே காவல் துறையினருக்கு உதவ இருக்கின்றது.