சுமார் 23 இந்திய மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் 2024-25 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில் குறிப்பிடத்தக்க சரிவானது பதிவாகியுள்ளது.
சேர்க்கை எண்ணிக்கையானது, சுமார் 21.83 லட்சம் மாணவர்களாகப் பதிவாகியுள்ள உத்தரப் பிரதேசத்தில் மிகக் கடுமையான சரிவு காணப்பட்டது.
இச்சேர்க்கையில் பீகாரில் 6.14 லட்சம் மாணாக்கர்களும், இராஜஸ்தானில் 5.63 லட்சம் மாணாக்கர்களும் குறைந்துள்ளனர்.
2023-24 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கர்நாடகாவில் இச்சேர்க்கை எண்ணிக்கை சுமார் 2 லட்சமும்; அசாமில் 1.68 லட்சமும், தமிழ்நாடு மாநிலத்தில் சுமார் 1.65 லட்சமும் மற்றும் டெல்லியில் 1.05 லட்சமும் குறைந்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டிற்கான UDISE+ அறிக்கையானது, 2018-19 முதல் 2021-22 ஆம் ஆண்டு வரையிலான சராசரியுடன் ஒப்பிடும் போது ஒட்டு மொத்தப் பள்ளிச் சேர்க்கையில் (அரசு மற்றும் தனியார்) சுமார் 1.5 கோடி என்ற அதிக சரிவு பதிவாகியுள்ளது.