அரசுமுறைச் செயல்பாடுகளில் பெண்களின் பங்கேற்பிற்கான சர்வதேச தினம் - ஜூன் 24
June 26 , 2023 770 days 256 0
உலகெங்கிலும் உள்ள அரசுமுறை மற்றும் முடிவெடுக்கும் துறைகளில் பங்கு பெற்று உள்ள ஊக்கமிக்கப் பெண்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
ஆர்மீனிய நாட்டின் தூதர் டயானா அப்கர் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பெண் அரசு முறை அதிகாரியாக கருதப் படுகிறார்.
2023 ஆம் ஆண்டிற்கான கருத்துரு என்பது "தடைகளை உடைத்தல், எதிர்காலத்தை வடிவமைத்தல் : நிலையான மேம்பாட்டிற்கு அரசுமுறை செயல்பாடுகளில் பெண்களின் பங்கேற்பு" என்பதாகும்.
இந்த நாளானது கடந்த ஆண்டில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 76வது அமர்வில் உருவாக்கப் பட்டது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, 31 நாடுகளின் அரசு மற்றும்/அல்லது அரசாங்கத்தின் தலைவர்களாக 34 பெண்கள் பணியாற்றுகின்றனர்.