அரிதான மற்றும் அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ள தாவரங்கள் பாதுகாப்புத் திட்டம்
October 7 , 2023 704 days 477 0
தமிழ்நாடு, அரிய, அழிந்து வரும் மற்றும் அச்சுறுத்தல் நிலையில் உள்ள தாவரங்களில் சிலவற்றை (சில தமிழகத்தில் மட்டுமே காணப்படும்) காக்கும் பணியைத் தொடங்கி உள்ளது.
நாட்டிலுள்ள முதன்மையான நிறுவனங்களின் 30க்கும் மேற்பட்ட வகைபிரித்தல் வல்லுநர்கள் தமிழக மாநிலத்தின் தாவரங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த ஒரு மதிப்பீட்டினை மேற்கொண்டு 25 தாவரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
வகைபிரித்தல் வல்லுநர்கள் ஆரம்பத்தில் இந்த நடவடிக்கைக்காக 100 தாவரங்களைப் பட்டியலிட்டனர்.
சில இனங்கள் 500 அல்லது 1,000 எண்ணிக்கைக்கும் குறைவாக உள்ள வன இனங்களாக விடப்பட்டன.
100 தாவர இனங்களைக் கொண்டப் பட்டியலில் மீதமுள்ள தாவரங்களின் மதிப்பீடு மேற்கொள்ளப் படும்.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மூன்று இனங்கள் - டைசாக்சைலம் மலபாரிகம், கோசினியம் ஃபெனெஸ்ட்ராட்டம் மற்றும் மிரிஸ்டிகா மலபாரிகா அவற்றின் மருத்துவ மதிப்புகளுக்காக அதிகளவில் அழிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.