TNPSC Thervupettagam

அரிய நீல நிறத் தனித்த விண்மீன் கண்டுபிடிப்பு

July 30 , 2026 3 days 90 0
  • சர்வதேச ஆய்வாளர்களுடன் இணைந்து இந்திய வானியலாளர்கள், சுறுசுறுப்பாக உருவாகி வரும் ஒளிரும் நீல நிறத் தனித்த விண்மீன் (BSS) ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளதுடன் இது அதன் உருவாக்க செயல்முறைக்கான நேரடிச் சான்றையும் வழங்குகிறது.
  • நீல நிறத் தனித்த விண்மீன்கள் (BSS) என்பவை விண்மீன் திரள்களில் காணப்படும் ஒரு அரிய வகை விண்மீன்களாகும், அவை அதே திரளில் உள்ள மற்ற விண்மீன்களை விட இளமையாகவும், வெப்பமாகவும், பிரகாசமாகவும் மற்றும் அதிக நிறை கொண்டதாகவும் காணப்படுகின்றன.
  • ஒரே திரளில் உள்ள மற்ற விண்மீன்கள் பரிணாம வளர்ச்சியடைந்த பிறகும் இவை இளமையாகவே காணப்படுவதால், இந்த விண்மீன்கள் "தனித்த விண்மீன்கள்" என்று அழைக்கப்படுகின்றன.
  • துணை விண்மீனிலிருந்து நிறைப் பரிமாற்றம் மூலமாகவோ அல்லது இரண்டு விண்மீன்கள் ஒன்றிணைவதன் மூலமாகவோ BSS உருவாகின்றன என்று மிகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடு தெரிவிக்கிறது.
  • BSS-ஐ அதன் உருவாக்கக் கட்டத்தில் நேரடியாகக் கவனிப்பது மிகவும் அரிதான ஒன்றாகும் என்பதோடு மேலும் இது நட்சத்திரங்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்ள அறிவியலாளர்களுக்கு உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்