அரிய வகை கடல்வாழ் ஆம்பிபாட்/ஓட்டுமீன் - ஸ்டெனோதோ லோவ்ரி
March 15 , 2026 107 days 203 0
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ஆர்ஜியப்பள்ளி கடற்கரையில் முதன் முறையாக ஸ்டெனோதோ லோவ்ரி என்ற அரிய வகை கடல்வாழ் ஆம்பிபாட் / ஓட்டு மீன் கண்டறியப்பட்டுள்ளது.
இறால் போன்ற இந்த இனம் இதற்கு முன்பு, மலேசியக் கடற்கரைகளில் மட்டுமே காணப்பட்டது.
இது ஆம்பிபோடா வரிசையின் கீழ் ஸ்டெனோதோயிடே குடும்பத்தைச் சேர்ந்தது.
இது சிறிய தாவரங்கள் மற்றும் விலங்குப் பொருட்களை உண்டு வாழும் ஒரு சுத்திகரிப்பாளராக கடல் உணவுச் சங்கிலியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.