TNPSC Thervupettagam

அரிய வகை புளுபெர்ரி மீண்டும் கண்டுபிடிப்பு

May 29 , 2026 14 hrs 0 min 44 0
  • 188 ஆண்டுகளுக்குப் பிறகு, அருணாச்சலப் பிரதேசத்தின் சாங்லாங் மாவட்டத்தில் 'வாக்சினியம் பிலிஃபெரம்' என்ற அரிய வகை புளுபெர்ரியுடன் தொடர்புடைய தாவரம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் தாவரம் முதன்முதலில் 1836-ஆம் ஆண்டு மிஷ்மி மலைகளிலிருந்து சேகரிக்கப் பட்டது, பின்னர் 1850-ஆம் ஆண்டில் மேகாலயாவின் காசி மலைகளில் பதிவு செய்யப் பட்டது.
  • இது 'எரிகேசி' குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் காட்டு புளுபெர்ரி தாவரங்களுடன் தொடர்புடைய ஒரு ஏறு கொடிப் புதராகும்.
  • அருணாச்சலப் பிரதேசத்தின் சாங்லாங் மாவட்டம் விஜயநகரில் உள்ள நோவா-டிஹிங் நதிக்கு அருகில் 2 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வெறும் 16 தாவரங்களை மட்டுமே ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
  • இந்த இனம் IUCN-ஆல் "அருகி வரும் இனமாகப்" பட்டியலிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்