2026 ஆம் ஆண்டில் இந்தியா அரிய வகை நிரந்தரமான புவிக் காந்தங்களை உற்பத்தி செய்யத் தொடங்கும் என்றும் நான்கு மாநிலங்களில் முக்கியமான கனிமப் பூங்காக்களை அமைக்கும் என்றும் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் அறிவித்தார்.
மத்திய அமைச்சரவை நவம்பர் 2025 இல், ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு ₹7,280 கோடி நிதி செலவில் ஒப்புதல் அளித்தது.
மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள், மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இந்தக் காந்தங்கள் பயன்படுத்தப் படுகின்றன.
ஒடிசா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் முக்கியக் கனிமங்களை தூய்மையாக்கும் பூங்காக்களை அரசாங்கம் நிறுவும்.
பழைய கைபேசிகள் மற்றும் பிற மின்னணு கழிவுகளிலிருந்து முக்கியத் தாதுக்களை மறு சுழற்சி மூலம் மீட்டெடுக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.