TNPSC Thervupettagam

அரிவாள் செல் இரத்த சோகை ஒழிப்பு இயக்கம்

June 26 , 2026 6 hrs 0 min 63 0
  • 2047 ஆம் ஆண்டிற்குள் அரிவாள் செல் இரத்த சோகையை ஒழிப்பதற்கான தேசிய அரிவாள் செல் இரத்த சோகை ஒழிப்பு இயக்கத்தை (NSCEM) இந்தியப் பிரதமர் மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
  • இந்தத் திட்டம் 3 ஆண்டுகளுக்குள் (2023 முதல் 2026 ஆம் ஆண்டு வரை) இந்தியா முழுவதும் 40 வயதிற்குட்பட்ட சுமார் 7 கோடி மக்களிடம் பரிசோதனை மேற்கொள்வதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • இது பழங்குடியினரின் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதுடன், முன்கூட்டியே பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு மூலம் அரிவாள் செல் நோயின் மரபணு பரவலைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சுகாதாரம் மற்றும் திருமணம் தொடர்பான விழிப்புணர்வுக்கு உதவும் வகையில் பயனாளிகளுக்கு 'அரிவாள் செல் மரபணு நிலை அட்டைகள்' வழங்கப்பட்டன.
  • இந்தத் தொடக்க விழாவின் போது சுமார் 3.57 கோடி ஆயுஷ்மான் பாரத் PM-JAY அட்டைகளும் விநியோகிக்கப்பட்டன.
  • இத்திட்டமானது இந்தியாவின் 17 அதிக கவனம் செலுத்தும் மாநிலங்களில் தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் செயல்படுத்தப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்