அரிவாள் செல் இரத்த சோகை நோயினை ஒழிப்பதற்கான திட்டம்
February 3 , 2023 928 days 496 0
2047 ஆம் ஆண்டிற்குள் அரிவாள் செல் இரத்த சோகையை ஒழிப்பதற்கான ஒருதிட்டத்தைத் தொடங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்தார்.
2047 ஆம் ஆண்டிற்குள் அரிவாள் செல் இரத்த சோகையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்படும்.
இது விழிப்புணர்வு உருவாக்கம், பாதிக்கப்பட்டப் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள 0 முதல் 40 வயதுக்குட்பட்ட ஏழு கோடி நபர்களின் பொது உடல் பரிசோதனை ஆகியவற்றினை உள்ளடக்கியதாகும்.
உடலின் பல்வேறுப் பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதே இரத்தச் சிவப்பணுக்களின் ஒரு முதன்மைப் பணியாகும்.
அரிவாள் செல் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் ஆக்ஸிஜனைச் சுமந்துச் செல்லும் திறன் பாதிக்கப் படுகிறது.
அரிவாள் செல்கள் என்பது அரிவாளின் வடிவத்தைப் போலவே C வடிவத்தில் மாறுகின்ற செல்களாகும்.