அருகி வரும் இனங்களுக்கான தேசிய தினமானது ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக் கிழமையன்று கடைபிடிக்கப் படுகிறது.
இந்த வருடம் அருகி வரும் இனங்களுக்கான தேசிய தினமானது மே 21 ஆம் தேதியன்று வருகிறது.
எத்தனை விலங்கினங்கள் அருகி வரும் நிலைக்குத் தள்ளப்படும் நிலையில் உள்ளன என்பதையும் முன்பு ஒரு காலத்தில் அமைதியாக நிலவிய ஒரு சுற்றுச்சூழலிற்கு காலநிலை மாற்றங்களின் கடும் விளைவுகள் எவ்வளவு இன்னல்களை விளைவிக்கின்றன என்பது பற்றியும் ஒரு மறுசீராய்வினை மேற்கொள்ளச் செய்வதற்கு இந்த தினமானது நமக்கு உதவுகிறது.