IUCN அமைப்பின் (சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம்) 2025 ஆம் ஆண்டு உலக பாதுகாப்பு மாநாட்டில் இந்தியா தனது முதல் அருகி வரும் உயிரினங்களின் செந்நிறப் பட்டியலை வெளியிட்டது.
இந்தியாவின் செந்நிறப் பட்டியல் ஆனது, உலகளாவிய வளங்காப்புத் தர நிலைகளுடன் ஒன்றி, அதன் எல்லைக்குள் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களை ஆவணப்படுத்துகின்றது.
இந்த மாநாடு ஆனது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்றது.
இந்தியா 1969 ஆம் ஆண்டு முதல் IUCN ஒன்றியத்தின் உறுப்பினர் நாடாக உள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் IUCN மாநாடு ஆனது, உலகளாவிய வளங்காப்பு முன்னுரிமைகள் குறித்து வாக்களிப்பதற்காக 1,400க்கும் மேற்பட்ட உறுப்பினர் அமைப்புகளை ஒன்றிணைத்தது.
இந்த மாநாடானது இதற்கு முன்னதாக 2021 ஆம் ஆண்டில் பிரான்சின் மார்சேயில் நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டு மாநாடானது, மீள்தன்மை மிக்க வளங்காப்பு நடவடிக்கை, பருவ நிலை இடர் குறைப்பு, சம பங்கீடு, இயற்கைக்கு உகந்த பொருளாதாரப் பிரிவுகள் மற்றும் வளங்காப்பு சார் புத்தாக்கம் ஆகிய ஐந்து கருத்துக்களில் கவனம் செலுத்தியது.