TNPSC Thervupettagam

அருகிய கன நீர் மேம்பாட்டிற்கான சோதனை மையம்

August 1 , 2025 14 hrs 0 min 13 0
  • அருகிய கன நீர் மேம்பாட்டிற்கான முதல் தனியார் சோதனை மையத்தினை இந்தியா திறந்து வைத்துள்ளது.
  • மும்பையைச் சேர்ந்த TEMA இந்தியா நிறுவனத்திடம், அருகிய கனநீரை மேம்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்களைச் சோதிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுள்ளது.
  • கனநீர் (D2O) என்பது வழக்கமான ஹைட்ரஜனுக்குப் பதிலாக ஹைட்ரஜனின் கனமான ஐசோடோப்பான டியூட்டீரியத்தைக் கொண்ட ஒரு வகையான நீர் (H2O) ஆகும்.
  • தொடர் சங்கிலி எதிர்வினையின் போது வேகமாக நகரும் நியூட்ரான்களை மெதுவாக்குவதற்கு இது குளிரூட்டியாகவும், வேக மிதமாக்கிகளாகவும் பயன்படுத்தப் படுகிறது.
  • D2O திறமாக செயல்பட 99.9% தூய்மையாக இருக்க வேண்டும்.
  • ஆனால் காலப்போக்கில், அது ஒளி அல்லது வழக்கமான நீரால் மாசுபடுகிறது.
  • எனவே, வடிகட்டுதல் செயல்முறையைப் பயன்படுத்தி அருகிய கனநீரை 99.9% தூய்மையாக மீண்டும் மேம்படுத்த வேண்டும்.
  • 2047 ஆம் ஆண்டிற்குள் 100 GW நிறுவப்பட்ட அணுசக்தி திறனை அடைவதை இந்தியா தனது இலக்காக வைத்துள்ளது.
  • 8,780 MW நிறுவப்பட்ட திறனுடன்  இந்தியாவில் 24 அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்