அருணாச்சலப் பிரதேசத்தில் பால்சம் இனங்கள் கண்டுபிடிப்பு
January 5 , 2018 2738 days 997 0
கேரளாவின் கள்ளிக்கோட்டை பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் நான்கு புதிய பால்சம் இனங்களை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவில் 230க்கும் மேற்பட்ட பால்சம் தாவர இனங்கள் உள்ளன.
வடகிழக்கு மாநிலங்களின் தாவரவியல் வகைப்பாட்டியலுக்கு (Taxonomy) பெரும்பங்காற்றிய அருணாச்சலப் பிரதேசத்தின் மாநில வன ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளரான ஹரிதாசனை கவுரவிக்கும் வகையில் இந்நான்கு பால்சம் தாவர இனங்களுள் ஒரு இனத்திற்கு ஹரிதாசனின் பெயர் கொண்டு இம்பாடியேன்ஸ் ஹரிதாசனி (Impatiens Haridasani) என தாவரவியல் பெயர் சூட்டப்பட்டுள்ளது.