TNPSC Thervupettagam

அருமண் உலோக ஏற்றுமதியில் சீனாவின் கட்டுப்பாடு

October 14 , 2025 14 hrs 0 min 19 0
  • தேசியப் பாதுகாப்பு சார்ந்த அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி ஐந்து கூடுதல் அருமண் உலோகங்கள் மீதான புதிய ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை சீனா அறிவித்து உள்ளது.
  • இதனால், ஏற்றுமதி தடை விதிக்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தன.
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் அருமண் உலோகங்களை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் சிறப்புத் தொழில்நுட்ப உபகரணங்கள் மீதும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும்.
  • மின்சார வாகனங்கள், குறைக்கடத்திகள் மற்றும் போர் விமானங்கள் மற்றும் எறிகணைகள் உள்ளிட்ட முக்கியமான அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற தொழில்நுட்பங்களுக்கு அருமண் உலோகங்கள் மிக முக்கியமானவையாகும்.
  • உலகளாவிய அருமண் உலோகச் செயலாக்கத்தில் சுமார் 90% ஆனது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
  • சீனாவின் அருமண் உலோகங்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளதால், இந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் அமெரிக்கா அதிகம் பாதிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்