கேர்எட்ஜ் என்ற நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டு அறிக்கையின் படி, உலகின் அருமண் தனிமச் சுரங்க (REE) இருப்புக்களில் 8 சதவீதத்தினை இந்தியா கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு வருடாந்திர இந்தியக் கனிமங்கள் தகவல் புத்தகத்தின்படி இந்தியா 130 இருப்புகளை அங்கீகரித்துள்ளது.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய REE இருப்புக்களைக் கொண்டுள்ளது, ஆனால் இது உலகளாவிய REE சுரங்க நடவடிக்கையில் சுமார் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே பங்களிக்கிறது.
இது கனிமத் துறையில் இந்தியாவின் சுயச் சார்பினை உருவாக்குவதற்காக 2025 ஆம் ஆண்டில் அரசாங்கம் தேசிய முக்கிய கனிமத் திட்டத்தினைத் (NCMM) தொடங்கச் செய்வதற்கு தூண்டுதலாக அமைந்தது.
சர்வதேச எரிசக்தி முகமையின் படி, உலகின் மொத்த இருப்புக்களில் சீனாவானது 49% பங்கினை கொண்டுள்ளது, REE இருப்புகளில் 69% ஆனது சுரங்க நடவடிக்கைகளுக்கு என்று அங்கு உட்படுத்தப்படுத்துகிறது, மேலும் REE சுத்திகரிப்பில் அது 90% பங்கைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் REE இருப்புக்கள் மிகப் பெரும்பாலும் மோனசைட் மணலில் (தோரியம் கொண்டது) காணப்படுகின்றன.
அருமண் தனிம மண் படிவுகள் காணப்படுகின்ற கடலோர மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகியவை அடங்கும்.
மினி ரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமான இந்திய அருமண் தனிம லிமிடெட் (IREL), அருமண் (RE) தனிம சேர்மங்களை உற்பத்தி செய்யும் மோனாசைட்டை செயல்முறை ஆக்கும் ஒரே நிறுவனமாகும்.
சுரங்க நடவடிக்கைகள் ஆனது கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் (CRZ) பல்வேறு விதிமுறைகளால் அதிகளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.
REE இருப்புகளில் மிதமான அருமண் தனிமக் கூறுகள் (LREE) உள்ளன, அதே நேரத்தில் கன அருமண் தனிமக் கூறுகள் (HREE) பிரித்தெடுக்கக்கூடிய அளவுகளில் கிடைப்பது இல்லை.
REE இருப்புகளின் முக்கியத்துவம் ஆனது தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்கள், வாகனத் துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளில் பரவி உள்ளது.