TNPSC Thervupettagam

அரேபியக் கடலில் சிறிய வெப்ப நீர் திரட்சி

October 22 , 2025 16 hrs 0 min 70 0
  • அரேபியக் கடலில், ஒவ்வோர் ஆண்டின் ஏப்ரல்-மே மாதங்களிலும் கேரளப் பகுதி கடற் கரைக்கு அருகில் 30°C கடல் மேற்பரப்பு வெப்பநிலையை விட அதிகமான அளவில் சிறிய வெப்ப நீர் திரட்சி உருவாகும்.
  • இந்த வெப்பமான நீர் திரட்சி உள்ளூர் வெப்பச் சலனத்தைத் தூண்டி, இந்திய துணைக் கண்டத்தை நோக்கி தென்மேற்கு பருவக் காற்றை ஈர்க்க உதவுகிறது.
  • எல் நினோ நிகழ்வுகள் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் காற்றோட்ட வடிவங்களைச் சீர்குலைப்பதன் மூலம் இந்திய கோடை கால பருவமழையை தாமதப் படுத்துகின்றன.
  • எல் நினோவுக்குப் பிறகு, 4 முதல் 5 மாதங்களுக்குப் பிறகு இந்தியப் பெருங்கடல் வெப்ப விரிவாக்க விளைவு ஆனது இந்தியப் பெருங்கடலில் தாமதமான வெப்ப மயமாதல் நிகழ்வினை ஏற்படுத்துகிறது.
  • கிழக்கத்தியக் காற்று மேற்பரப்பு குளிர்ச்சியைக் குறைத்து, தென்கிழக்கு அரேபியக் கடலில் சிறிய வெப்ப நீர் திரட்சியைத் தீவிரப்படுத்துகிறது.
  • ஒரு வலுவான வெப்ப நீர் திரட்சி குறைந்த அழுத்தத்தை உருவாக்குகிறது என்பதோடு  இது கேரளாவை நோக்கி ஈரமான காற்றை இழுத்து, சரியான நேரத்தில் பருவமழை தொடங்குவதை ஆதரிக்கிறது.
  • புது டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் உருவகப் படத்தில் காட்டப் பட்டுள்ளது போல 2010 ஆம் ஆண்டில் வலுவான எல் நினோ இருந்த போதிலும், இந்த வெப்ப நீர் திரட்சி காரணமாக பருவமழை முன் கூட்டியே தொடங்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்