TNPSC Thervupettagam

அர்ஜுனா சஹாயக் நீர்ப்பாசனத் திட்டம்

March 14 , 2021 1612 days 606 0
  • அர்ஜுனா சஹாயக் நீர்ப்பாசனத் திட்டமானது உத்தரப் பிரதேசத்தில் தொடங்கப்பட உள்ளது.
  • இந்தத் திட்டமானது பிரதமரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
  • இந்த நீர்ப்பாசனத் திட்டமானது விவசாயிகளுக்கு நேர்மறை மாற்றங்களைக் கொண்டு வர உள்ளது.
  • இது தசான் நதியின் மீது கட்டப்பட்டு வருகின்றது.
  • இந்தத் திட்டமானது உத்தரப்  பிரதேசத்தில் உள்ள பாண்டா, மஹோபா மற்றும் ஹமீர்பூர் ஆகிய பகுதிகளின் 168 கிராமங்களில் உள்ள 1.5 இலட்சம் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதியை அளிக்க இருக்கின்றது.
  • இந்தத் திட்டம் நிறைவு செய்யப்பட்ட பின்பு, ஏறத்தாழ 4 இலட்சம் மக்கள் தூய்மையான குடிநீரைப் பெற உள்ளனர்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன வசதியானது 15,000 ஹெக்டேர் நிலப் பகுதிக்கு வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்