TNPSC Thervupettagam

அறிவிக்கப்பட வேண்டிய நோய் - புற்றுநோய்

April 11 , 2026 15 hrs 0 min 26 0
  • ஒரு புதிய அரசாணையின் மூலம் புற்றுநோயை 'அறிவிக்கப்பட வேண்டிய நோயாக' தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
  • அனைத்து மருத்துவமனைகள், சிகிச்சையகங்கள், ஆயுஷ் (AYUSH - ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) மையங்கள் மற்றும் ஆய்வகங்கள் ஆகியன புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகளை ஒரு மாதத்திற்குள் அரசுக்குக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
  • முறையான பதிவுகளைப் பராமரிப்பதற்காக மையப்படுத்தப்பட்ட இணைய வழித் தளம் மூலம் தரவுகள் சேகரிக்கப்படும்.
  • தேசியப் புற்றுநோய் பதிவேட்டிற்குத் தரவுகளை அனுப்புவதற்கு முன்பு, MNJ புற்றுநோயியல் நிறுவனம் அதனைச் சரிபார்க்கும்.
  • இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல், சிறந்த சிகிச்சை அளித்தல் மற்றும் சுகாதாரத் திட்டமிடலை மேம்படுத்துதல் ஆகியவையே இதன் முக்கிய நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்