TNPSC Thervupettagam

அறிவிக்கப்பட வேண்டிய நோய் - புற்றுநோய்

August 18 , 2026 13 hrs 0 min 10 0
  • புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக, அதனை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்குமாறு 19 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 17 மாநிலங்கள் ஏற்கனவே புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்துள்ளன என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கின் (PIL) அடிப்படையில் இந்த வழக்கு விசாரிக்கப் பட்டது.
  • அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்கப்படுவதன் மூலம், புற்றுநோய் பாதிப்புகள் குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும், இது தரவு சேகரிப்பு மற்றும் கண்காணிப்பை மேம்படுத்த உதவும்.
  • அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் ஏன் கட்டாய வழி காட்டுதல்கள் வழங்கப்படவில்லை என்றும் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
  • நாடு முழுவதும் புற்றுநோயை அறிவிப்பதில் ஒரே மாதிரியான கொள்கை தேவை என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியது.
  • காசநோய், டெங்கு, மலேரியா, காலரா, ஹெபடைடிஸ், தட்டம்மை, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் போலியோ ஆகியவை பொதுவாக அறிவிக்கப்பட வேண்டிய நோய்களில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்