அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை
September 11 , 2023
613 days
457
- அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை SS இன்னோவேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இணைந்துள்ளார்.
- இஸ்ரோவின் சந்திரயான்-1 ஆய்வுத் திட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவர் ‘இந்தியாவின் நிலவு மனிதர்’ என்றும் அழைக்கப்பட்டார்.
- அவர் SS இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் உலகளாவிய நிறுவனமான SS இன்னோவேஷன்ஸ் இன்டர்நேஷனல் இன்க் ஆகியவற்றின் இயக்குநராக இருப்பார்.
- இவருக்கு 2016 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
- 2008 ஆம் ஆண்டில், கர்நாடக அரசிடமிருந்து அறிவியலுக்கான ராஜ்யோத்சவ பிரசஸ்தி விருதையும் அவர் பெற்றுள்ளார்.
- 2019 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சபைக்கு டாக்டர் அண்ணாதுரை துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
- கூடுதலாக, அவர் தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்திற்கான ஆளுநர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப் பட்டார்.

Post Views:
457