TNPSC Thervupettagam

அறிவியல் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் (SPoCS)

August 2 , 2025 14 hrs 0 min 15 0
  • SPoCS என்பது அறிவியல் மனப்பான்மை மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முதன்மைத் திட்டமாகும்.
  • இந்தத் திட்டமானது அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான தேசிய அறிவியல் அருங்காட்சியக சபை (NCSM) மூலம் செயல்படுத்தப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 27 அறிவியல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
  • வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மையங்கள் இந்த அமைச்சகத்திடமிருந்து சுமார் 90% நிதியைப் பெறுகின்றன என்பதோடு மேலும் அவை ஷில்லாங், திமாபூர், காங்டாக் மற்றும் ஐஸ்வால் போன்ற நகரங்களில் அமைந்துள்ளன.
  • உள்ளடக்கத் தன்மையினை ஊக்குவிப்பதற்காக 5 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில்  மூன்றாம் வகை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்