அறிவியல் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் (SPoCS)
August 2 , 2025 20 days 75 0
SPoCS என்பது அறிவியல் மனப்பான்மை மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முதன்மைத் திட்டமாகும்.
இந்தத் திட்டமானது அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான தேசிய அறிவியல் அருங்காட்சியக சபை (NCSM) மூலம் செயல்படுத்தப்பட்டது.
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 27 அறிவியல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மையங்கள் இந்த அமைச்சகத்திடமிருந்து சுமார் 90% நிதியைப் பெறுகின்றன என்பதோடு மேலும் அவை ஷில்லாங், திமாபூர், காங்டாக் மற்றும் ஐஸ்வால் போன்ற நகரங்களில் அமைந்துள்ளன.
உள்ளடக்கத் தன்மையினை ஊக்குவிப்பதற்காக 5 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் மூன்றாம் வகை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.