அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது, சமீபத்தில் அறிவியல் சமூகப் பொறுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டின் 104வது அமர்வானது, அறிவியல் சமூகப் பொறுப்பு வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் ஒரு அவசியத்தையும் வலியுறுத்தியது.
அறிவியல் சமூகப் பொறுப்பு வழிகாட்டுதல்கள் அனைத்து நிலைகளிலும் சமூகத்துடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அதிகளவு ஒருங்கிணைப்பினை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அறிவியல் சமூகப் பொறுப்பு வழிகாட்டுதல்கள் என்பது, அறிவியலின் நன்மைகளை சமூகத்திற்கு வழங்குவது பற்றிய அறிவியலாளர்களின் ஒரு தார்மீகக் கடமையை அடிப்படையாகக் கொண்டதாகும்.
எனவே, அறிவியல் அறிவு மற்றும் சமூக உளச்சான்றின் ஒருங்கிணைப்பாக அறிவியல் சமூகப் பொறுப்பு வழிகாட்டுதல்கள் விளங்கும்.