அறிவியல் துறையில் சிறந்து விளங்குவோருக்கான G.D. பிர்லா விருது 2023
April 3 , 2024 471 days 487 0
பிரயாக்ராஜ் நகரில் உள்ள ஹரிஷ் சந்திரா ஆய்வுக் கல்வி நிறுவனத்தின் புகழ்மிக்க இயற்பியலாளரான டாக்டர் அதிதி சென் தே, 2023 ஆம் ஆண்டிற்கான அறிவியல் துறையில் சிறந்து விளங்குவோருக்கான G.D. பிர்லா விருதினைப் பெற்றுள்ளார்.
இந்த விருதானது 1991 ஆம் ஆண்டு முதல் K.K. பிர்லா அறக்கட்டளையால் ஆண்டு தோறும் வழங்கப்படுகின்றது.
50 வயதுக்குட்பட்ட இந்தியாவில் வாழ்ந்து, பணிபுரியும் இந்திய அறிவியலாளர்களின் சிறந்தப் பங்களிப்புகளை இது அங்கீகரிக்கிறது.
இவர் இந்த விருதினைப் பெறும் 33வது அறிவியலாளர் மற்றும் முதல் பெண்மணி ஆவார்.
குவாண்டம் (துளிமம்) தொழில்நுட்பங்களின் மேம்பாட்டில் அவர் ஆற்றிய சிறந்தப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.