அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையானது பிரசார் பாரதியின் தூர்தர்ஷனுடன் இணைந்து இரண்டு அறிவியல் தொடர்பு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது. அவையாவன
அறிவியல் தொலைக்காட்சி
இந்திய அறிவியல்
ஆகியவையாகும்
அறிவியல் தொலைக்காட்சி என்பது பொது ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமான விஞ்ஞான் பிரச்சார் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இது தூர்தர்ஷனின் தேசிய அலைவரிசையில் ஒரு மணிநேரம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியாகும்.
இந்திய அறிவியல் என்பது இணைய வசதி அமைக்கப் பெற்ற அனைத்து உபகரணங்களிலும் கிடைக்கப் பெறும் ஓர் இணையதள அலைவரிசை ஆகும்.