TNPSC Thervupettagam

அறிவுசார் சொத்துப் பாதுகாப்பிற்கான முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியல்

May 1 , 2024 16 days 66 0
  • அமெரிக்க அரசு நிர்வாகத்தின் 2024 சிறப்பு 301 அறிக்கையில் இந்தியா முதல்நிலை கண்காணிப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
  • அறிவுசார் சொத்துரிமையின் (IP) பாதுகாப்பு மற்றும் அமலாக்கத்தில் இந்தியா "உலகின் மிகவும் சவால் மிகுந்த" முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது.
  • இந்தியாவைப் பொறுத்த வரையில் பின்வருவன உள்ளிட்ட பல்வேறு நீண்டகாலப் பிரச்சனைகள் உள்ளன:
    • போதிய அறிவுசார் சொத்துரிமை அமலாக்கம் இல்லாமை,
    • இயங்கலையில் மேற்கொள்ளப்படும் அதிக விகிதங்களிலான கொள்ளை,
    • ஒரு விரிவான வர்த்தக முத்திரை எதிர்ப்பு பின்னடைவு, மற்றும்
    • வர்த்தக இரகசியங்களைப் பாதுகாப்பதற்கான போதுமான சட்ட வழிமுறைகள் இல்லாமை.
  • மேலும், இந்தியா இன்றும் WIPO இணைய ஒப்பந்தங்களை முழுமையாகச் செயல் படுத்தவில்லை மற்றும் சட்டப்பூர்வ பதிப்புரிமை உரிமங்கள் ஊடாடும் வகையிலான பரிமாற்றங்களுக்கு நீட்டிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவில்லை.
  • இந்தியாவைத் தவிர, அர்ஜென்டினா, சிலி, சீனா, இந்தோனேசியா, ரஷ்யா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்