இம்மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட ஏழு காப்புரிமைத் தகவல் மையங்கள் (PIC - Patent Information Centres) ஆனது தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தினால் (TNSCST) அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
சேலம், பெரியார் பல்கலைக்கழகம்; கொடைக்கானல், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்; கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்; சென்னையின் இந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம்; கோவையின் நேரு கல்வி குழும நிறுவனங்கள்; திருச்செங்கோட்டில் உள்ள K.S ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி; மற்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள IPR மையங்களுக்கு இந்த மையத்தினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டன.
புவிசார் குறியீடு பதிவுக்காக, வெவ்வேறு IPR செல்களில் ஐந்து விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் உள்ள IPR மையத்தில் தாக்கல் செய்யப்பட்ட வந்தவாசி கோரைப் பாய் (புல்லின் பிளவுபட்ட தண்டுகளால் நெய்யப் பட்ட பாய்), கொல்லிமலை பலாப்பழம் (பலா) மற்றும் KS ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் கொல்லிமலை காபி, நேரு குழும நிறுவனத்தில் பொள்ளாச்சி தென்னை நார், கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் முகவை குளியடிச்சான் சிவப்பு அரிசி (சிவப்பு நிற அரிசி வகை) ஆகியனவாகும்.