NCRA–TIFR (தேசிய ரேடியோ வானியற்பியல் மையம் - டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்) நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் அலக்நந்தா என்ற புதிய சுழல் அண்டத்தினைக் கண்டுபிடித்தனர்.
12 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இது பேரண்டம் 1.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருந்த போது உருவாக்கப் பட்டது.
இந்த அண்டம் பால் வெளி அண்டத்தினைப் போலவே இரண்டு சுழல் புயங்களையும் பிரகாசமான மையப் புடைப்பினையும் கொண்டுள்ளது.
ஆரம்பகால அண்டங்கள் ஒழுங்கற்றதாகவும் கட்டமைக்கப்படாததாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக முந்தைய அறிவியல் மாதிரிகள் கூறின ஆனால் அலக் நந்தா நன்கு வடிவமைக்கப்பட்ட சுழல் அமைப்பைக் காட்டுகிறது.
அலக்நந்தாவில் ஒரு நீண்ட கால சுழல் வடிவம் இருப்பது, அந்த மாதிரிகள் கணித்ததை விட பேரண்டத்தில் முன்னதாகவே சிக்கலான அண்டக் கட்டமைப்புகள் இருந்தன என்பதைக் குறிக்கிறது.