TNPSC Thervupettagam

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் 100வது ஆண்டு (AMU)

December 26 , 2020 1611 days 869 0
  • பிரதமர் மோடி அவர்கள் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிப்பதற்காக ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளார்.
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள AMUவின் (Aligarh Muslim University) ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வது இதுவே முதன்முறையாகும்.
  • மேலும் கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் இந்த பல்கலைக்கழகத்தின்  நிகழ்வுகளில் பிரதமர் ஒரு ”தலைமை விருந்தினராக” கலந்து கொள்வது இதுவே முதன்முறையாகும்.
  • பிரதமர் மோடி அவர்கள் AMU பல்கலைக்கழகத்தை ”ஒரு சிறிய இந்தியா” என்று புகழ்ந்து உள்ளார்.
  • AMU ஆனது ஒரு இந்தியச் சட்டமன்றச் சட்டத்தின் மூலம் 1920 ஆம் ஆண்டில் ஒரு பல்கலைக் கழகமாக மாறியது.
  • இது முகம்மதியன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி (Mohammedan Anglo Oriental - MAO) என்ற நிலையிலிருந்து ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் என்ற நிலைக்கு அதனை உயர்த்தியுள்ளது.
  • MAO ஆனது 1877 ஆம் ஆண்டில் சர் சையது அகமது கான் அவர்களால் அமைக்கப் பட்டது.
  • அதன் பிறகு இந்தக் கல்லூரியானது அலிகார் இயக்கம் எனப்பட்டது.
  • இது இந்திய முஸ்லீம் மக்களுக்காக வேண்டி ஒரு நவீனக் கல்வி அமைப்பை ஏற்படுத்துவதன் தேவையை வலியுறுத்தியது.
  • இது மலப்புரம் (கேரளா), AMU முர்ஷிதாபாத் மையம் (மேற்கு வங்கம்) மற்றும் கிசான்கன்ஜ் மையம் (பீகார்) ஆகிய 3 இடங்களில் கீழ்நிலை வளாக மையங்களைக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்