இந்தியாவின் அலுமினியத் துறையை வலுப்படுத்துவதற்காக 'அலுமினியம் அச்சேற்ற உற்பத்தியாளர்கள் சங்கம்' (ALEMAI) 'அலுமினியம் பாரத்' என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
இது அலுமினிய மதிப்புச் சங்கிலியை மேம்படுத்துவதையும், உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்துறை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை ஆதரிக்கும் வேளையில் உற்பத்தி வீழ்ச்சி மற்றும் குறைந்த திறன் பயன்பாடு போன்றவற்றை எதிர் கொள்கிறது.
அதிக மூலப்பொருள் மற்றும் எரிசக்தி செலவுகள், குறைவான பழைய இரும்பு / கழிவுகள் கிடைப்பது மற்றும் மலிவான இறக்குமதி ஆகியவை இதில் உள்ள சவால்கள் ஆகும்.
இத்துறையை மேம்படுத்துவதற்காக ALEMAI அமைப்பு 'அலுமினியம் பாரத் 2026' என்ற நிகழ்வை குஜராத்தின் காந்திநகரில் நடத்தவுள்ளது.