TNPSC Thervupettagam

அலுவல் மொழிக் குழுவின் பரிந்துரைகள்

October 19 , 2022 1032 days 586 0
  • அலுவல் மொழிக் குழுவின் 11வது தொகுதியானது குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப் பட்டது.
  • இந்தி மொழி பேசும் மாநிலங்களில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகங்கள், இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களில் இந்தி மொழியைப் பயிற்றுவிப்பு மொழியாகப் பயன்படுத்துவதற்கு இக்குழு பரிந்துரைத்தது.
  • இந்தி மொழி பேசாத மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் மேற்கொள்ளப் படும் வழக்குகள் ஆங்கிலம் அல்லது பிராந்திய மொழியில் பதிவு செய்யப் படுகின்றன.
  • தீர்ப்புகள் பெரும்பாலும் ஆங்கில மொழியில் இருப்பதால் அவற்றை இந்தி மொழியின் மூலமான மொழி பெயர்ப்புகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
  • இந்தி மொழி பேசும் மாநிலங்களில் இந்தி மொழியைப் பயன்படுத்தாத மத்திய அரசுப் பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்கள் வருடாந்திரச் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையில் (APAR) அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
  • இந்த விதிகளின்படி, A வகை மாநிலங்களில் இந்தி அதிகாரப்பூர்வ மொழியாகும்.
  • B வகை மாநிலங்களில் 65 சதவீதத்திற்கும் குறைவாக இந்தி பயன்படுத்தப்படுகிறது.
  • C வகை மாநிலங்கள் என்பது 65 சதவீதத்திற்கும் குறைவாக இந்தி மொழிப் பயன்பாடு உள்ள மாநிலங்கள் ஆகும்.
  • A பிரிவு மாநிலங்களில் இந்தி மொழியை முழுமையாகப் பயன்படுத்துமாறும்,  மற்ற மாநிலங்கள் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்துமாறும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
  • அலுவல் முறையிலான தகவல்தொடர்புகளில் ஆங்கில மொழியின் பயன்பாட்டைக் குறைப்பதும், இந்தியின் பயன்பாட்டை அதிகரிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
  • அலுவல் முறையிலான தகவல்தொடர்புகளில் இந்தி மொழியைப் பயன்படுத்துவதை மறு ஆய்வு செய்வதற்கும் அதனை மேம்படுத்துவதற்கும் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் அலுவல் மொழிக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
  • இது இந்திய அரசியலமைப்பின் 351வது பிரிவின் மூலம் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.
  • இது 1976 ஆம் ஆண்டில் 1963 ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டது.
  • இந்தக் குழுவின் முதல் அறிக்கை 1987 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்