அலை இயக்கத்தின் மூலம் இயங்கும் தானியங்கு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கருவி
March 26 , 2025 268 days 237 0
இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனங்கள் ஆனது, அலை இயக்கத்தின் மூலம் இயங்கும் தானியங்குக் கருவி (வேவ் கிளைடர்) எனப்படும் நீர் மூழ்கி எதிர்ப்புப் போர்க் கருவிகளுக்கான (ASW) தானியங்கு மேற்பரப்புக் கப்பல்களை (ASVs) ஒருங்கிணைந்து உருவாக்குவதற்கும் இணைந்து தயாரிப்பதற்குமான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அலை மற்றும் சூரிய சக்தியால் இயக்கப்படும் வேவ் கிளைடர் ஆனது ஒரு தானியங்கு கட்டுப்பாட்டாளர்கள் இல்லாத மேற்பரப்பு/மிதப்பு வாகனம் (USV) ஆகும்.
அவை தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ இணைந்து, ஓராண்டு வரையில் நிகழ்நேரத் தரவை வழங்குகின்றன.
இது தற்போது கடல் சார் கட்டமைப்புகளைக் கண்காணிக்கவும், கடலுக்கு அடியில் உள்ள எண்ணெய்க் கிணறு கட்டமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.