TNPSC Thervupettagam

அழிந்து வரும் கழுகுகளுக்கான காப்பிடம்

November 12 , 2025 5 days 40 0
  • முதுமலை புலிகள் வளங்காப்பகத்தில் (MTR) மோயார் ஆற்றங்கரையில் 10,000க்கும் மேற்பட்ட டெர்மினாலியா அர்ஜுனா ('நீர் மருது') மரங்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்தனர்.
  • மேம்பட்ட வனவிலங்கு வளங்காப்பு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை நடத்திய ஆய்வில், சுமார் 93% மரங்கள் உயிர்ப்புடன் இருப்பதாகவும், செழிப்பாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.
  • இந்த மரங்களில் மிக அருகி வரும் வெண் முதுகுக் கழுகுகளின் (ஜிப்ஸ் பெங்கலென்சிஸ்) மொத்தம் 56 கூடுகள் அடையாளம் காணப் பட்டன.
  • இந்த மரங்கள் மலபார் இராட்சத அணில்கள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் பிற உயிரினங்களையும் ஆதரிக்கின்றன என்பதோடு இது அதன் அதிகச் சுற்றுச்சூழல் மதிப்பைக் காட்டுகின்றன.
  • பூர்வீகத் தாவரங்களை மீட்டெடுக்க உதவும் வகையில், 2026 ஆம் ஆண்டிற்குள் சென்னா ஸ்பெக்டபிலிஸ் மற்றும் ப்ரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா போன்ற அயல் இனங்களை அழிக்க வன அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்