TNPSC Thervupettagam

அழியாத மை பயன்பாடு

January 23 , 2026 21 days 68 0
  • மகாராஷ்டிராவின் மாநில தேர்தல் ஆணையம் ஆனது, ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதி தேர்தல்களுக்கு மார்க்கர்-பேனா மை துடைக்கப்படக் கூடியதாக உள்ளது என்ற புகார்களைத் தொடர்ந்து பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் அழியாத மைக்கு மாற முடிவு செய்துள்ளது.
  • மீண்டும் வாக்களிப்பதைத் தடுக்க வாக்களித்த பிறகு வாக்காளரின் விரலில் அழியாத மை தடவப்படுகிறது.
  • தேர்தல் மோசடியைத் தடுக்க வேண்டி இந்தியா 1962 ஆம் ஆண்டில் (மூன்றாவது பொதுத் தேர்தல்) இதைப் பயன்படுத்தத் தொடங்கியது.
  • இந்த மையில் வெள்ளி நைட்ரேட் உள்ளது என்பதோடு இது தோல் மற்றும் ஒளியுடன் வினை புரிந்து நீண்ட கால இருண்ட கறையை உருவாக்குகிறது.
  • அகற்றப்படக் கூடிய மார்க்கர் பேனாக்களைப் போலல்லாமல் பாரம்பரிய மையானது நம்பகத் தன்மை மற்றும் தேர்தல் ஒருமைப்பாட்டை உறுதி செய்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்