உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மீதான ஐ.நா. பொதுச் சபையின் ஓர் அரிய சிறப்பு அவசர அமர்வினைக் கூட்டுவதற்காக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறை வாக்கெடுப்பினை இந்தியா புறக்கணிப்பு செய்தது.
இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இந்த வாக்கெடுப்பினைப் புறக்கணிப்பு செய்தன.
இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 11 வாக்குகள் பெறப்பட்டதால் இத்தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது.
இது 1950 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்ட பொதுச் சபையின் 11வது அவசர அமர்வு ஆகும்.