வேகமாகப் பரவி வரும் தட்டம்மை நோயைக் கட்டுப்படுத்த வங்காள தேசம் அவசரகால தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
தட்டம்மை என்பது 'பாராமிக்ஸோவைரஸ்' குடும்பத்தைச் சேர்ந்த வைரஸால் ஏற்படும் மிகவும் தொற்றும் தன்மை கொண்ட காற்றுவழி நோயாகும்.
இது இருமல், தும்மல் மற்றும் அசுத்தமான காற்று அல்லது மேற்பரப்புகள் மூலம் பரவுகிறது மற்றும் இதனால் இரண்டு மணி நேரம் வரை தொற்றுத் தன்மையுடன் இருக்கக் கூடும்.
அதிக காய்ச்சல், இருமல், சளி, கண்கள் சிவத்தல் மற்றும் தோல் தடிப்பு போன்றவை பொதுவான அறிகுறிகளாகும்; இது முக்கியமாகத் தடுப்பூசி போடாத குழந்தைகளைப் பாதிக்கிறது.
தட்டம்மை-ரூபெல்லா (MR) தடுப்பூசி நீண்ட காலப் பாதுகாப்பை வழங்குகிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதே மிகவும் பயனுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கையாகும்.