TNPSC Thervupettagam

அவசியக் கோட்பாடு

March 28 , 2026 3 days 55 0
  • இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், 'தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சட்டம், 2023'-க்கு எதிரான மனுக்களை விசாரிப்பதில் இருந்து விலகியுள்ளார் என்பதோடு இதில் நலன் சார்ந்த முரண்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
  • விலகுதல் என்பது ஒரு வழக்கில் நீதிபதி ஒருதலைப்பட்சமாக செயல்பட வாய்ப்புள்ளது அல்லது பாரபட்சம் காட்டக் கூடும் என்ற நியாயமான பயம் இருக்கும்போது, நீதியான விசாரணைக்காக அந்த நீதிபதி தானாகவே வழக்கிலிருந்து விலகுவதைக் குறிக்கும்.
  • இது இயற்கை நீதியின் விதியான "நிமோ ஜூடெக்ஸ் இன் காசா சுவா" அதாவது "யாரும் தனது சொந்த வழக்கில் நீதிபதியாக இருக்கக் கூடாது" என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • அவசியக் கோட்பாடு என்பது ஒரு வழக்கை விசாரிக்க வேறு தகுதியான அதிகார அமைப்போ அல்லது நீதிமன்றமோ இல்லாத நிலையில், நலன் சார்ந்த முரண்பாடு இருந்தாலும் சம்பந்தப்பட்ட நீதிபதியே அந்த வழக்கை விசாரிக்க இக்கோட்பாடு வழி வகை செய்கிறது.
  • இக்கோட்பாடு 2015 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க வழக்கு (NJAC வழக்கு) விசாரணையின் போது பயன்படுத்தப்பட்டது, அப்போது அந்த விவகாரம் அனைத்து நீதிபதிகளையும் பாதிக்கும் என்பதால் அவர்கள் விலகவில்லை.
  • நீதிபதிகள் வழக்கிலிருந்து விலகுவது தொடர்பாக இந்தியாவில் தற்போது வரை எந்தவொரு வடிவமைக்கப்பட்ட சட்டமோ அல்லது தெளிவான விதிகளோ இல்லை; இது நீதிபதிகளின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலேயே முடிவெடுக்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்