அஸ்த்ரா மார்க் 2 என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உருவாக்கப்பட்டு வரும் காட்சிப்புல வரம்பிற்கு அப்பாற்பட்ட வானிலிருந்த படியே வானில் உள்ள இலக்கினைத் தாக்கி அழிக்கும் (BVR) எறிகணை ஆகும்.
இது அஸ்த்ரா மார்க் 1 எறிகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.
ஏற்கனவே இந்திய விமானப் படையில் பயன்பாட்டில் உள்ள அஸ்த்ரா மார்க் 1 ஆனது, LCA தேஜாஸ் மற்றும் Su-30 MKI ஆகிய வான்வழி அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
மார்க் 2 ஆனது, 200 கிலோ மீட்டருக்கு அப்பால் நீடிப்பதற்கான வாய்ப்புடன் 150 முதல் 180 கிமீ வரையிலான தாக்கும் வரம்பைக் கொண்டிருக்கும்.
மேக் 4.5 வரையிலான வேகத்தில் பயணிக்கின்ற இது Su-30 MKI ஒருங்கிணைப்பில் இருந்து ஓர் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரேடியோ அதிர்வெண் (RF) தேடு பொறியைக் கொண்டுள்ளது.