ஆயுஷ் அமைச்சகமானது அஸ்வகந்தத்தின் மீதான ஒரு மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள உள்ளது.
இது ஐக்கிய ராஜ்ஜியத்திலுள்ள லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்ப மண்டல மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து, மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தக் குழுவானது கோவிட்-19 தொற்று மீது இம்மருந்தினுடைய செயல்திறனைச் சோதித்துப் பார்க்க உள்ளது.
அகில இந்திய ஆயுர்வேத கல்வி நிறுவனம் மற்றும் லண்டன் சுகாதார மற்றும்வெப்ப மண்டல மருத்துவக் கல்லூரி ஆகியவை அஸ்வகந்தத்தின் மீதான மருத்துவச் சோதனைக்காக வேண்டி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை சமீபத்தில் மேற் கொண்டன.
கோவிட்-19 நோயாளிகள் மீது இந்த மருந்தினுடைய செயல்திறனைக் கண்டறிய வேண்டி ஓர் அயல்நாட்டு நிறுவனத்துடன் ஆயுஷ் அமைச்சகம் கைகோர்ப்பது இதுவே முதல்முறையாகும்.
குறிப்பு
அஸ்வகந்தத்தினுடைய அறிவியல் பெயர் விதானியா சோம்னிஃபெரா (withania somnifera) என்பதாகும்.
இது பொதுவாக ‘இந்திய குளிர்கால செர்ரிப் பழம்’ என்றும்அழைக்கப்படுகிறது.