TNPSC Thervupettagam

அஸ்ஸாம் ரைபில்ஸ் சிறப்பு அதிகாரங்கள்

February 24 , 2019 2349 days 695 0
  • அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து மற்றும் மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் எவர் ஒருவரையும் கைது செய்யவும் ஆணை இல்லாமல் எந்த ஒரு இடத்தையும் சோதனையிடவும் மத்திய அரசினால் அஸ்ஸாம் ரைபில்ஸ் வீரர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
  • “அஸ்ஸாம் ரைபில்ஸ் படையில் அதிகாரி நிலையில் உள்ளவர்கள் அல்லது அதற்கு இணையான கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு” குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி இந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
  • அஸ்ஸாம் ரைபில்ஸ் என்பது வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் முதன்மையான கிளர்ச்சி எதிர்ப்புப் படையாகும்.
  • மேலும் இது முக்கியமான இந்திய–மியான்மர் எல்லைப் பகுதியையும் பாதுகாக்கிறது.
  • ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டமானது வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் செயல்பாட்டில் உள்ளது. இச்சட்டம் இந்தப் பகுதியில் பணியாற்றும் இராணுவத்திற்கும் அதே போன்ற அதிகாரத்தை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்