TNPSC Thervupettagam

அஹிர் படைப் பிரிவுக்கான கோரிக்கை

March 28 , 2022 1239 days 529 0
  • அஹிரின் பெயரிடப்பட்ட ஒரு முழு அளவிலான காலாட்படைப் படைப் பிரிவுக்கான ஒரு கோரிக்கைக்கு அரசியல்வாதிகளிடமிருந்து ஆதரவைப் பெற்றது.
  • 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரெசாங் லா போரில் (இந்தியா-சீனா போர்) ஹரியானா மாநிலத்தின் அஹிர் துருப்புக்களின் (படை வீரர்களின்) துணிச்சலின் கதை பரவலாக அறியப்பட்ட பின்னர் அஹிர் சமூகம் தேசிய மக்களின் பார்வைக்குக் கொண்டு வரப் பட்டது.
  • அஹிர்வால் பிராந்தியம் தெற்கு ஹரியானா மாவட்டங்களான ரேவாரி, மகேந்திரகர் மற்றும் குர்காவ்ன் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
  • 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் நாயகன் அஹிர் நாயகர் ராவ் துலா ராம் (Rao Tula Ram) என்பவருடன் இந்தப் பகுதியானது தொடர்புடையதாகும்.
  • இந்தப் பகுதியானது பாரம்பரியமாக இந்திய ராணுவத்திற்கு அதிக எண்ணிக்கையில் வீரர்களைப் பங்களித்து இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்