TNPSC Thervupettagam

ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியான புதிய திட்ட அறிவிப்புகள்

August 17 , 2025 2 days 57 0
  • மாநில உரிமைகளை ஆக்கிரமிக்கும் மத்திய அரசுக்குப் பதிலளிக்கும் விதமாக தமிழக முதல்வர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
  • உண்மையான கூட்டாட்சியை மீட்டெடுக்கவும், மாநில சுயாட்சியைப் பாதுகாக்கவும் அரசியலமைப்பு ரீதியான தீர்வு காண முதல்வர் அழைப்பு விடுத்தார்.
  • நல திட்ட அறிவிப்புகள் (9 முக்கிய முன்னெடுப்புகள்):
    • மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயணம் ஆனது மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
    • முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவசப் பேருந்து பயணம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டின் முன்னாள் இராணுவ வீரர்களுக்கான விடுதி 22 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை மாதவரத்தில் கட்டப்பட உள்ளது.
    • பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களின் கல்லூரி பயிலும் பிள்ளைகளுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பிலான திறன் பயிற்சித் திட்டம்.
    • இரண்டாம் உலகப் போரின் முன்னாள் இராணுவ வீரர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ரூபாயாக உயர்த்தப் பட்டது.
    • சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் 12,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
    • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் ஓட்டுநர் பள்ளி நிறுவப்படும்.
    • இரண்டு பிராந்திய ஓட்டுநர் அகாடமிகள் மற்றும் ஒரு மாநில அளவிலான ஓட்டுநர் அகாடமி தொடங்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்